“எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க” என்று மரணப் போராட்டத்திற்கு இடையே ஒரு தந்தை எழுப்பிய உருக்கமான குரல் வீணான சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாகடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் மார்பு வலியுடன் வந்த 37 வயது பிஸ்மீர், அங்குள்ள மருத்துவப் பணியாளர்களின் கடும் அலட்சியத்தால் உயிரிழந்தார். மூச்சு விட முடியாமல் அவர் துடித்தபோதும், அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சையோ அல்லது ஆக்சிஜன் உதவியோ வழங்காமல், நாற்காலியில் உட்கார வைத்து ஊழியர்கள் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருந்த கொடூரம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
“எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க… எனக்கு மூச்சு விட முடியல, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க”
மரண விழும்பில் ஒரு தந்தையின் கூக்குரல் – மருத்துவமனையின் அலட்சியத்தால் போராடிய உயிர் பிரிந்தது.
மூச்சு விட சிரமப்பட்டபோதும், 37 வயது பிஸ்மீர் தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை… pic.twitter.com/XQKLT4yiPY
— கரன் (@kajan1215) January 27, 2026
