இப்படி ஒரு முட்டாள்தனமான தந்தையா..? குழந்தையை சிங்கத்தின் மேல் உட்கார வைத்து செய்த காரியம்… திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்..!!

By Soundarya on ஆனி 19, 2025

Spread the love

பொதுவாக குழந்தைகளை தங்களுடைய தாய், தந்தையை விட எவராலும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாது. இது அனைவருமே அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் தந்தை ஒருவர் தன்னுடைய முட்டாள் தனத்தால் தன்னுடைய சொந்த குழந்தையை ஒரு சிங்கத்திடம் கொண்டு போய் வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது தந்தை ஒருவர் தன்னுடைய மகனை சிங்கத்தின் மேல் உட்கார வைக்கிறார். அப்போது அந்த குழந்தை பயந்து கத்துகிறது . ஆனால் தந்தை தன்னுடைய இந்த செயலால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். சிங்கம் திடீரென்று தன்னுடைய குழந்தையை தாக்கலாம் என்பதை மறந்து அவர் இந்த செயலில் ஈடுபடுகிறார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Times Now (@timesnow)

இந்த வீடியோ  தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் இது எங்கே? எப்போது? எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. குழந்தை அழும்போது அந்த தந்தை குழந்தையின் மீது எந்த ஒரு பரிதாபமும் காட்டவில்லை. ஆனால் திடீரென்று சிங்கம் தாக்குகிறது. அதன் பிறகு தான் தன்னுடைய குழந்தையை காப்பாற்றுகிறான். இதை பார்த்த பலரும் அந்த தந்தையை திட்டி தீர்த்து வருகிறார்கள்.