பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தனது மகளின் நடனத்தை ஒரு தந்தை தனது எளிய பட்டன் போனில் (Button Phone) படம்பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்தத் தந்தைக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்தோ அல்லது விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் குறித்தோ எந்த அறிவும் இல்லை. ஆனால், தன் மகளின் அந்த அழகான கலை நிகழ்ச்சியை என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பேரன்பு மட்டுமே அவரிடம் இருந்தது.
ஜிதேந்திர சரஸ்வத் என்பவரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சுற்றியுள்ளவர்கள் விலையுயர்ந்த போன்களில் படம் பிடித்துக் கொண்டிருக்க, அந்த நபர் மட்டும் தனது சிறிய பட்டன் போனை உயர்த்திப் பிடித்து மகளின் நடனத்தை மிக ஆர்வமாகப் பதிவு செய்கிறார். அந்த போனின் தரம் குறைவாக இருக்கலாம், ஆனால் அந்தத் தந்தையின் பார்வையில் அதுவே உலகின் மிகச்சிறந்த கேமரா என்பதை அந்த வீடியோ உணர்த்துகிறது.
View this post on Instagram
