“முதல்ல சொல்லிருந்தா என் மகனை காப்பாற்றியிருக்கலாமே…” கையில் மகனை ஏந்தி கதறி அழுத தந்தை…. ஹாஸ்பிடல் வாசலில் பரிதாபம்…. கண்கலங்க வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பக்ரைச் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அன்ஷுமன், கடுமையான காய்ச்சல் காரணமாக பக்ரைச் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தான். சிறுவனின் உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், அங்குள்ள மருத்துவர்கள் உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு மாற்றாமல் 3 நாட்கள் தாமதித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் நிலைமை கையை மீறியதும், சிறுவனை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் லக்னோ கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், பாராபங்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது மகனின் உடலை மடியில் ஏந்தியபடி தந்தை கதறி அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்தது. “ஆரம்பத்திலேயே எனது மகனை வேறு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்திருந்தால் என் குழந்தை பிழைத்திருப்பான்” எனத் தந்தை கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.