தாய்லாந்தில் தனது மகளைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் நபரை, அப்பெண்ணின் தந்தை தைரியமாக எதிர்கொண்டு தட்டிநிகேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அப்பெண்ணுடன் ஒரு இரவு பொழுதைக் கழிக்க விரும்புவதாகத் தெரிவித்துத் தொல்லை கொடுத்து வந்த நிலையில், மகளின் பாதுகாப்பிற்காகத் தந்தை நேரடியாகக் களத்தில் இறங்கினார்.
சம்பவத்தன்று அந்தச் சந்தேக நபர் மீண்டும் பெண்ணை அணுகியபோது, அப்பெண்ணின் தந்தை அவரை மடக்கிப் பிடித்துக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். தனக்கு நேர்ந்த அசௌகரியம் குறித்துப் பெண் கூறியதைக் கேட்ட தந்தை, அந்த நபரின் தவறான எண்ணத்தைச் சுட்டிக்காட்டி எச்சரித்தார். தந்தையின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், அங்குமிங்கும் தப்பிக்க முயன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.
https://twitter.com/i/status/2087145515322327073
இந்தச் சம்பவம் முழுவதையும் சுற்றியிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மகளின் பாதுகாப்பிற்காகத் துணிச்சலாக நின்று போராடிய தந்தையின் செயலைப் பாராட்டி, பல இணையவாசிகளும் அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற தொடர் தொல்லைகள் குறித்துக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
