திருச்சி ஏர்போர்ட்டில் ரணகளம்… விஜய்யை பேட்டி எடுக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி… பவுன்சர்களின் ‘முரட்டு’ தாக்குதல்… அலறியடித்த விமான நிலையம்…!!!

By Muthu Mani on சித்திரை 10, 2026

Spread the love

காரைக்குடியில் தனது பரப்புரையை முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக நடிகர் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தபோது, செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்கள் மீது அவரது பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) முரட்டுத்தனமாகத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டி எடுக்க முயன்ற ஊடகத்தினரைச் சரமாரியாகத் தள்ளிவிட்டுத் தாக்கியதால், விமான நிலைய வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்த எதிர்பாராத அத்துமீறலால் பத்திரிகையாளர்கள் பலத்த காயமடைந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தலையிட்டுச் சூழலை ஒருவாறாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவராகத் தடம் பதித்து, மக்களின் ஆதரவை எதிர்நோக்கி வரும் நிலையில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகையாளர்கள் மீது இத்தகைய வன்முறை ஏவப்பட்டது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மக்களுக்காகப் பணியாற்றுவதாகக் கூறும் ஒரு தலைவரின் முன்னிலையிலேயே இத்தகைய தாக்குதல் நடப்பது எந்த விதத்தில் நியாயம்?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினர் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.