
CINEMA
விமானத்தில் சூப்பர் ஸ்டாரின் படத்தைப் பார்த்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்… சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரா இருப்பாரோ… வைரலாகும் வீடியோ…
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன். இவர் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என பல்வேறு நேர்காணங்களில் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் கூட இவர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த மகிழ்ச்சியான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதில் அவர் ‘என்னுடைய 7 வயதிலிருந்து நான் நடிகர் ரஜினியின் ரசிகன். கண்டிப்பாக ஒருநாள் ரஜினியை அவர் வீட்டில் சென்று சந்திபேன் என்று எனது பெற்றோரிடம் கூறி வந்தேன்.
தற்பொழுது தலைவர் ரஜினி என்னை அவர் வீட்டிற்கே அழைத்துள்ளார். என் கனவு நனவானது.’என்று குறிப்பிட்டிருந்தார். அவர் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதை தொடர்ந்து தற்பொழுது விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….
View this post on Instagram