பங்களாதேஷில் கணேஷ் சக்ரவர்த்தி என்பவரின் குடும்பத்தினர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகி உள்ள செய்திகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
அவரது மகளுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இத்தகைய சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு, சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் அமைதி ஆகியவற்றைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
மனித உரிமைகள் என்பது அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும், இத்தகைய கொடூர வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட வேண்டும் என்றும் இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். பங்களாதேஷில் வாழும் சிறுபான்மை அமைப்பினரின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
