தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை ‘ஆக்சிஸ் மை இந்தியா’ எக்ஸிட் போல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, 18 முதல் 19 வயது வரையிலான முதல்முறை வாக்காளர்களில் (First Time Voters) சுமார் 68 சதவீதம் பேர் தவெக-விற்கே தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர். அதேபோல், 20 முதல் 29 வயதுடைய இளைஞர்களில் 59 சதவீதம் பேர் விஜய்க்கு வாக்களித்துள்ளதாக இந்தக் கணிப்பு கூறுகிறது.
இருப்பினும், 40 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் இப்போதும் திமுக பக்கமே தங்களது ஆதரவைத் தக்க வைத்துள்ளனர். மூத்த வாக்காளர்களின் அனுபவமும், இளம் வாக்காளர்களின் எழுச்சியும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தலில், இளைஞர்களின் பெரும் ஆதரவு விஜய்க்குச் சாதகமாக அமையுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர்கள் உருவெடுத்துள்ளதையே இந்தக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இளைய தலைமுறையினரின் இந்த அதிரடி மாற்றத்தால், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் இளைஞர்களின் இந்த எழுச்சி பிரதிபலிக்குமா என்பது தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…