“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 22, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான ஹரிபிரசாத் என்பவர் கடந்த 2025 மார்ச் மாதம் 4 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்தார்.

இக்கொலை வழக்கில் கைதாகிச் சிறையிலிருந்த ஹரிபிரசாத், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து நிஜாமாபாத் பகுதியில் தங்கியிருந்துள்ளார். தங்கை கொல்லப்பட்டு 7 மாதங்கள் கழித்து அவர் வெளியே சுற்றியதைக் கண்டு ஆத்திரமடைந்த வைஷ்ணவியின் அண்ணன் சந்தோஷ், செப்டம்பர் 17 அன்று நிஜாமாபாத் கிரீன் கிராஸ் சாலையில் வைத்து ஹரிபிரசாாதை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகப் பழி தீர்த்தார்.

   

கொலை செய்துவிட்டுத் தப்பிய சந்தோஷ், “என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன். இனிமேல் எந்தப் பெண்ணின் மீதும் கை வைக்க அனைவரும் பயப்பட வேண்டும்” என்று உருக்கமான வீடியோ ஒன்றைப் பேசி வெளியிட்டு விட்டுச் செப்டம்பர் 19 அன்று போலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். கர்ப்பிணி தங்கையைக் கொன்ற கணவனை அண்ணன் பழிக்குப்பழி வாங்கிய இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.