ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்ற அதிரடி வெற்றிக்குப் பிறகு, பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகளும் பாடகியுமான அனன்யா பிர்லா சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அணியின் வெற்றியைத் தனது ‘துரந்தர்’ பாடலைப் பாடி அவர் கொண்டாடினார். இருப்பினும், அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள், ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாரனை மறைமுகமாகத் தாக்கிப் பேசப்பட்டதா என்ற விவாதத்தை இணையதளங்களில் கிளப்பியுள்ளது.
இது குறிப்பாக, வெற்றிக்குப் பிறகு உற்சாகமாக இருக்கும் அனன்யா பிர்லாவின் இந்த செயல், தோல்வியடைந்த அணியின் உரிமையாளரை வம்பு இழுப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஒருபுறம் ரசிகர்கள் அனன்யாவின் இந்தப் பதிவை வெற்றிக் கொண்டாட்டமாகப் பார்க்கின்றனர்.
RCB owner Ananya Birla COOKING kavya Maran in her own style 🔥
Ananya has put an Instagram story after winning #RCBvsSRH with a song from movie Dhurandhar, this will give More burn to Pakistan sympathizer Kaviya Maran. Last month Kavya Maran bought Pakistan leg-spinner Abrar… pic.twitter.com/tkFLrWa5eo
— Chota Don (@choga_don) March 28, 2026
“>
இதன் மறுபுறம், காவ்யா மாரனின் ரசிகர்கள் இது தேவையில்லாத ஒரு சீண்டல் என அதிருப்தி தெரிவித்துள்ளனர். அனன்யா பிர்லா நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அந்தச் சூழலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் காவ்யா மாரனை நோக்கியே இருந்ததாக நெட்டிசன்கள் பலமாக நம்புகின்றனர். இதன் விளைவாக, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
