ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரம், துணை அதிபரும் ஆவார். இவரது மகள் ஷேக்கா மஹ்ரா துபாய் இளவரசி ஆவார். கடந்த ஆண்டு ஷேக்கா மஹ்ராவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் துபாய் இளவரசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பதிவிட்டுள்ளார். அதில் அன்புள்ள கணவரே, நீங்கள் மற்றவர்களுடன் உறவில் இருப்பதால் நம் விவாகரத்தை இதன் மூலம் அறிவிக்கிறேன்.
நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். Take care இப்படிக்கு உங்கள் முன்னால் மனைவி என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்த அந்த நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் துபாய் இளவரசியின் முடிவுக்கு பலரும் வரவேற்பும் அளித்துள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய முறைப்படி துபாய் இளவரசி அவரது கணவரை விவாகரத்து செய்துள்ளார். மேலும் துபாய் இளவரசி தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
View this post on Instagram