ராஜஸ்தான் சாலை போக்குவரத்து பிரிவில் பேருந்து ஓட்டி வருபவர் ஓட்டுநர் பரஸமல். இவர் அஜ்மீர் மற்றும் கோட்டா இடையே பேருந்து ஓட்டிய பொழுது மேல் சட்டை அணியாமல் டவுசர் மட்டும் அணிந்து கொண்டு பேருந்தை இயக்கியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது மட்டும் இன்றி அவர் பேருந்து ஓட்டும் பொழுது பக்கத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டே ஓட்டியுள்ளார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதனை அடுத்து இந்த வீடியோ வைரலானதால் ராஜஸ்தான் சாலை வழி தலைமையகம் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்து அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
