“என் கார்ல சாதி பேச்சுக்கு இடமில்லை… அதிகாரியை துணிச்சலாக இறக்கிவிட்ட டிரைவர்… 99 ஆண்டுகள் முடக்கிய ரேபிடோ… உ . பி – யில் பரபரப்பு…!”

By Swetha on ஆவணி 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ‘ரேபிடோ’ நிறுவனத்தின் தாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அங்கித் குமார் என்பவரின் கணக்கை அந்நிறுவனம் 99 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அங்கித் குமார், தனது காரில் நான்கு ரயில்வே அதிகாரிகளை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது அந்த பயணிகள், தங்களின் உயர் அதிகாரியைப் பற்றிப் பேசுகையில் அவசியமின்றி குறிப்பிட்ட சாதிப்பெயரைக் கூறி அவதூறாகப் பேசியுள்ளனர். இதைக் கண்டித்த அங்கித் குமார், “ஒரு நபரைக் குறை சொல்வதாக இருந்தால் அவரின் பெயரைக் கூறிப் பேசுங்கள், ஒட்டுமொத்த சாதியை ஏன் தவறாகப் பேசுகிறீர்கள்?” என அவர்களிடம் வாக்குவாதம் செய்து, பயணிகளை காரை விட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.

   

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பயணிகள் ரேபிடோ நிறுவனத்திடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், ஓட்டுநர் அங்கித் குமாரிடம் எந்தவொரு விளக்கமும் கேட்காமல், ரேபிடோ நிறுவனம் அவரது கணக்கை இடைநீக்கம் செய்து முடக்கியுள்ளது. ஓட்டுநர் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை இணையத்தில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.