சனிக்கிழமை காலை கன்னிங்ஹாம் சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகையுடன் தீப்பற்றத் தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. ஆபத்தை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாகக் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அருகில் இருந்த பொதுமக்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதற்குள்ளாகவே, தீ மளமளவென வாகனம் முழுவதும் பரவி காரைச் சேதப்படுத்தியது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், பேட்டரி கோளாறு அல்லது மின்கசிவு காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
