மருத்துவமனையா?… மரணக் கூடாரமா?… காலுக்கு பிளாஸ்டர் போட வந்த பெண்ணுக்கு தெரியாமல்… இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர்… பரிதாபமாக பறிபோன நோயாளியின் உயிர்…!!

By Swetha on ஆடி 28, 2026

Spread the love

ஹரியானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர்களின் கடுமையான அலட்சியத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற வந்த அந்தப் பெண்ணுக்கு, அவரது குடும்பத்தினரிடமோ அல்லது நோயாளியிடமோ எந்தவித முன்னறிவிப்போ அனுமதியோ இன்றி ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டு, இதயத்தில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவையற்ற மற்றும் முறையற்ற சிகிச்சையின்போதே அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

எலும்பு முறிவுக்குச் சிகிச்சை பெற வந்து உயிரை இழந்த நோயாளியின் உயிரிழப்பு குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நோயாளிக்குத் தெரியாமல் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மருத்துவமனைகள் மீதான பொதுமக்கள் நம்பிக்கையில் கேள்வியையும் எழுப்பியுள்ளது.