விஜய் கொடுக்கும் டஃப்…. திமுக போடும் மாஸ்டர் பிளான்…! 2026-ல் யாருடைய தேர்தல் அறிக்கை ஜெயிக்கப்போகுது…?

By Devi Ramu on தை 2, 2026

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நேரடியாகக் கேட்டறிந்து அதனைத் தேர்தல் அறிக்கையாக மாற்ற திமுக ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை வகுத்துள்ளது. இதற்காக ஜனவரி 7-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கருத்து கேட்பு படிவங்களை வழங்க உள்ளனர்.

மக்கள் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை அதில் பதிவு செய்யலாம். மகளிர் உரிமைத் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவது, ஆண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் மற்றும் மாவட்டந்தோறும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது போன்ற அதிரடி வாக்குறுதிகள் திமுகவின் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மறுபுறம், தவெக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைத் தயார் செய்து வருகின்றன.

   

தவெக தரப்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் இருசக்கர வாகனம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி அளிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அதிமுக தரப்பில் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தவும், தாலிக்குத் தங்கம் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கும் அறிவிப்பு ஜனவரி 9-இல் வெளியாக வாய்ப்புள்ளதால், தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.