தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தலில் தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், கூட்டணியில் தற்போது மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குறைவான தொகுதிகள் குறித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன. கடந்த முறை வழங்கிய 6 இடங்களையாவது உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், திமுக அதற்குச் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆலோசனை செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த இந்த முரண்பாடு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…
கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…
டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…