“தாய் பாசம்னா இதுதான்!”… குரங்கு செய்த விபரீத தப்பு.. குரங்கை அன்பால் திருத்திய பெண்… இன்ஸ்டாகிராமில் வைரலாகும் க்யூட் வீடியோ..!!!

Spread the love

குரங்கு ஒன்று தவறுதலாக சோப்புக்கட்டியை உணவு என நினைத்து உண்ண முயன்றபோது, ஒரு பெண் அதனைத் தாயுள்ளத்தோடு தடுத்து உருளைக்கிழங்கை வழங்கிய நெகிழ்ச்சியான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சோப்புக்கட்டியைப் பழம் என நினைத்து குரங்கு வாயில் வைக்க முயன்றதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். ஆனால், அங்கு வந்த பெண் ஒருவர் எவ்விதக் கூச்சலும் இன்றி, ஒரு சிறு குழந்தையைக் கையாளுவது போல மிகவும் அமைதியாகவும் பாசமாகவும் அந்தச் சூழலை எதிர்கொண்டார்.

அந்தப் பெண் தன் கையில் இருந்த உருளைக்கிழங்கை குரங்கிடம் காட்டி, சோப்பு சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்பதை மென்மையான கண்டிப்புடன் சைகைகள் மூலம் விளக்கினார். ஆரம்பத்தில் சோப்பை விட மறுத்து அடம் பிடித்த குரங்கிற்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே ஒரு சிறு இழுபறிப் போராட்டம் நடந்தது. ஒரு தாய் தன் குழந்தையைத் திருத்துவது போன்ற அந்தப் பெண்ணின் அன்பான அணுகுமுறை, பார்ப்பவர்களைப் புன்னகைக்க வைப்பதோடு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் பொறுமையைக் கண்ட குரங்கு சோப்பைக் கைவிட்டுவிட்டு, அவர் நீட்டிய உருளைக்கிழங்கை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி மிக இயல்பாக முடிந்த இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான புரிதலையும் அன்பையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்த அழகான காணொளி தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தீயாய்ப் பரவி வருகிறது.

Muthu Mani

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

5 minutes ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

8 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

17 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

24 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

29 minutes ago