Connect with us

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத 6 இயக்குனர்களின் முதல் படம்.. என்றைக்கும் பொக்கிஷமாக பாரதிராஜாவின் 16 வயதினிலே..

CINEMA

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத 6 இயக்குனர்களின் முதல் படம்.. என்றைக்கும் பொக்கிஷமாக பாரதிராஜாவின் 16 வயதினிலே..

 

எம்.ஆர் ராதா முதல் எம்.ஜி.ஆர் வரை, ரஜினி முதல் விஜய் வரை சினிமாவின் தாக்கமே தமிழ் மக்களின் கலாச்சாரமாக மாறிவிட்டது, மக்களின் வாழ்வில் ஒன்றி போய் நிற்கும் அளவிற்கு சினிமாவில் வரும் விஷயங்களை பார்த்து தான் மக்களின் நடைமுறையே முடிவு செய்கிறது, அதேபோல் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் 60,70-களில் யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் படமே மிக சிறப்பான படத்தை கொடுத்து மக்களை வியக்கச் செய்த பல இயக்குனர்கள் உள்ளார்கள். அதில் மிகச் சிறந்த 6 இயக்குனர்களின் காவியமாக உருவாக்கப்பட்ட அவர்களின் முதல் படத்தை தற்போது பார்ப்போம்.

1965 ஆம் ஆண்டு கே. பாலச்சந்திரன் அவர்கள் இயக்கத்தில் முதல் முதலில் உருவான படம் தான் “நீர்க்குமிழி”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகேஷ், சௌகார் ஜானகி, கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி என்று பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகச் சிறப்பாக உருவாக்கி, இயக்குனர் “பாலச்சந்திரர்” அவர்கள் முதல் படத்திலேயே மக்களை வியக்கச் செய்தார்.

   

நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, போக்கிரி ராஜா என்று மெகா பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் ரசிகர்களை ஒரு உலுக்கு உலுக்கிய இயக்குனர் தான் “எஸ்.பி முத்துராமன்”. இவர் எவ்வளவு சிறப்பான படங்களை எடுத்திருந்தாலும், இவர் முதல் படம் தான் இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை, 1972ல் ஜெய்சங்கர், முத்துராமன், ஜெயலட்சுமி அவர்களின் மிகச் சிறப்பான நடிப்பில் இயக்குனர் முத்துராமனின் முதல் படைப்பே “கனி முத்து பாப்பா”.

1977ல் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியின் மிகச் சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வந்து திரையுலகை மிரண்டு போகும் அளவிற்கு “பாரதிராஜா” அவர்கள் உருவாக்கிய முதல் படம் தான் “16 வயதினிலே”. இது இன்று வரை மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத ஒரு படமாக வேர் ஊன்றி நிற்கிறது. சிவாஜியை வைத்து உருவாக்கிய முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் சீமையிலே என்று பல ரசிக்கக் கூடிய படங்கள் கொடுத்திருக்கிறார். இருப்பினும் அவர் எடுத்த முதல் படமான 16 வயதினிலே படம் தான் நீங்கா நினைவாக இருக்கிறது.

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், தங்கப்பதக்கம் என்று மக்கள் மனம் உருக வைக்கும் அளவிற்கு படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் என்றால் “மகேந்திரன்” அவர்கள் தான். இவர் எவ்வளவு ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் இவர் முதல் படமான 1978ல் ரஜினியின் மிகச் சிறந்த நடிப்பில் வெளிவந்த “முள்ளும் மலரும்” படம் தான்.

முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, சொக்கத்தங்கம் என்று ரசிகர்களை இருக்கையில் கட்டி போட்டு பார்க்க வைத்த இயக்குனர் தான் “பாக்கியராஜ்”. இவர் படைப்பில் மிகச் சிறந்த படைப்புதான் இவர் முதல் படமான 1979 வெளிவந்த “சுவர் இல்லாத சித்திரங்கள்” ஆகும்.


ஆர் சுந்தரராஜன் அவர்கள் தற்போது குணச்சித்திரன் நடிகராக வளம் வந்து கொண்டிருந்தாலும். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்தார். சுந்தர்ராஜன் உருவாக்கிய மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றுதான், இவர் முதல் படமான 1982ல் வெளிவந்த “பயணங்கள் முடிவதில்லை”. இப்படம் தான் சினிமாவில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று இப்போ வரை பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இவர் கொடுத்த மற்ற வெற்றி படங்கள் தான் நானே ராஜா நானே மந்திரி, பொண்டாட்டி ராஜ்ஜியம், சரணாலயம்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top