இனிமே அவங்க பேச்சை கேட்டு படங்களில் நடிக்க கூடாது – கேப்டன் விஜயகாந்த் மகன் திடீர் முடிவு!

By Elango on மார்கழி 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானவர் சண்முக பாண்டியன். இவர் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன். அதன்பிறகு மதுர வீரன் படை தலைவன் ஆகிய படங்களிலும் நடித்தார். அந்த படங்களும் சரியாக ஓடவில்லை. இப்போது பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்த 4வது படம் கொம்பு சீவி. அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இந்த படத்தின் கதை சண்முகபாண்டியனுக்கு ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை. அதனால் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவரது அம்மா பிரேமலதாவும், மாமா எல்கே சுதீஷூம்தான் கேட்ட கதைகளிலேயே இதுதான் நல்லா இருக்குது என்று சொல்லி சண்முக பாண்டியனை நடிக்க வைத்திருக்கின்றனர். இப்போது கொம்பு சீவி படமும் பிளாப் ஆனதால், இனி அப்செட் ஆகிவிட்டார் சண்முக பாண்டியன். இனிமேல் கதை விஷயத்தில் அம்மா, மாமா பேச்சை கேட்காமல் நானே கதையை முடிவு செய்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.