“என்னை எப்படியாவது காப்பாத்துங்க… இவங்க என்னை கொன்னுடுவாங்க…” என்று போனில் கதறி அழுதுகொண்டே அந்தப் பெண் சொன்ன அந்த சில வார்த்தைகளோடு, அடுத்த சில நிமிடங்களில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. டெல்லியின் இந்திரபுரி பகுதியில் வசித்து வந்த 25 வயதான அந்தப் பெண்ணிற்கு, கடந்த 2022 டிசம்பரில் திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான சில நாட்களிலேயே வரதட்சணைக் கேட்டு கணவர் வீட்டாரால் அவர் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டார். ஒருமுறை மாமியார் வீட்டாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில், அவரது காது ஜவ்வே கிழிந்துபோனது. இருப்பினும், “குடும்பம் பிரிந்துவிடக் கூடாது” என்ற ஒரே காரணத்திற்காக, அவர் போலீசில் புகார் அளிக்காமல் அமைதியாக அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
மரணத்தின் விளிம்பில் இருந்த அந்தப் பெண், இறுதியாகத் தன் சகோதரிக்குத் தொடர்பு கொண்டு, “அப்பாவோட குரலை கடைசியா ஒருமுறை கேட்கணும்… இனி நான் பேச மாட்டேன்னு தோணுது… என் 6 மாத குழந்தையை நல்லா பார்த்துக்கோங்க…” என்று நாத்தழுதழுக்கக் கூறியுள்ளார். அதன் பிறகு போன் துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்களிலேயே, “அவள் வீட்டின் நான்காவது மாடியில் இருந்து குதித்துவிட்டாள்” என்ற செய்தி பெண்ணின் பெற்றோருக்கு வந்தது. பதறிப்போய் டெல்லிக்கு ஓடிவந்த பெற்றோருக்கு, மருத்துவமனையில் தங்களது மகள் சடலமாகக் கிடந்த அதிர்ச்சிதான் எஞ்சியது.
மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட கதையில், நெஞ்சை உலுக்கும் பெரும் திருப்பம் இருப்பதாகப் பெண்ணின் வீட்டார் குற்றம் சாட்டுகின்றனர். இது தற்கொலை அல்ல, திட்டமிட்டக் கொலை என்றும், தங்களது மகளை மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொன்றுவிட்டார்கள் என்றும் அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தத் துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இந்த மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…
"இன்னொரு ஆண் பிள்ளை வேண்டும்" என்ற ஆசையினால், 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர் தனது 8 வருட…
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில், 90 வயதான முதியவர் ஒருவரின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.500-ஐப் பெறுவதற்காக, அவருடைய மருமகள்…
கனடாவிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தானாகவே முன்வந்து மீண்டும் தாய்நாட்டிற்குத்…
டெல்லியின் பரபரப்பான லஜ்பத் நகர் பகுதியில் 'கேரிமென்' (CarryMen) என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கியுள்ள விசித்திரமான சேவை, தற்போது…