தேதி குறிச்சாச்சி… விஜய்யின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்… தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி… வெளியான மாஸ் அப்டேட்…!!

By Muthu Mani on பங்குனி 28, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பயணத்தின் முக்கியக் கட்டமாக, வரும் மார்ச் 29-ஆம் தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, தமிழ்நாட்டின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகள் என மொத்தம் 264 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முறைப்படி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாகத் திகழும் தவெக, மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலை முன்னெடுத்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்வாக நடைபெற உள்ளது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

கட்சியின் வெற்றிச் சின்னமான ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியைப் பெறும் வகையில், கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாற்றத்தை நோக்கிய தவெக-வின் இந்தப் பயணம் மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.