குஜராத்தில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட திறந்தவெளி மேடை நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் நடனமாடினார். இந்த நடன வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த காங்கிரஸ் மற்றும் அதன் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ அந்த நடனம் ‘அபத்ரா’ என்றும், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அறிக்கை வெளியிட்டது.
மேலும் அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட அந்த மாணவி தற்போது கண்ணீருடன் சமூக வலைதளங்களில் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். தனது நடனத்தை தவறாகச் சித்தரித்ததற்காக மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகக் கூறிய அந்த மாணவி, ஒரு கலையை அரசியல் லாபத்திற்காக கொச்சைப்படுத்துவது முறையல்ல என்று தெரிவித்தார்.
Watch | A female student of MS University – whose dance performance at an ABVP open-stage campus event was shared widely by Congress and NSUI with a press statement labelling it as ‘abhadra’ and against ‘Samskar’ – has come forward to present her side on social media, with tears… pic.twitter.com/1H1EnlbEiS
— DeshGujarat (@DeshGujarat) April 13, 2026
“>
இதனால் ஒரு மாணவியின் திறமையை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அதை ‘சம்ஸ்கார்’ அல்லது கலாச்சாரம் என்ற பெயரில் இழிவுபடுத்துவது தனது மனநலனை பாதித்துள்ளதாக அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். மாணவியின் இந்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
