இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மக்களை கவரும் வகையில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி பலரையும் மகிழ்விக்கிறது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அவர்கள் செய்யும் சிறு சிறு சேட்டைகளை பார்த்து மனதில் எவ்வளவு பெரிய கவலைகள் இருந்தாலும் அது நொடிப்பொழுதில் காணாமல் போய்விடும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோவில், சில சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் ஒரு மெத்தை மீது அமர்ந்து கண்ணை மூடி ஜெபம் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த காட்சியை ஒரு ஆசிரியை கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிறுவன் மட்டும் கண்ணை மூடாமல் கவனித்துக் கொண்டிருப்பதை ஆசிரியர் பார்த்துள்ளார். ஆசிரியர் கையால் கண்ணை மூடு என சைகை செய்த போது குழந்தைக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.
அதற்கு அந்த சிறுவன் ஆசிரியரைப் போலவே சைகை செய்ய தொடங்குகிறான். இந்த சின்ன சின்ன நிமிடங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நேரத்திற்கு பிறகு ஆசிரியரின் செய்கையை புரிந்து கொண்டு தன்னுடைய விரல்களால் சிறுவன் அழகாக கண்ணை மூடுகிறான். இதனைப் பார்த்து அனைவரும் சிரிப்பில் மூழ்கினர். இந்த வீடியோ வெளியாகி பலருடைய குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது.
मासूमियत on peak 🥺
(Wait for end) pic.twitter.com/UeaSIy7wqL
— MemeCreaker (@MemeCreaker) September 18, 2025
