இது ரெண்டாவது கொலையா..? கள்ளக்காதலியைக் கொலை செய்து மூட்டையில் கட்டி வீசிய கொடூரன்.. விசாரணையில் திடுக்கிடும் பின்னணி..!!

Spread the love

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே கள்ளக்காதல் மற்றும் பணத்தகராறு காரணமாகப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி (40), தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும், அய்யப்பன் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே பண விவகாரத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தமிழ்செல்வியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக, அவரது உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அய்யப்பனைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

போலீசாரின் மேல் விசாரணையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அய்யப்பன் ஏற்கனவே வேறொரு பெண்ணைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. ஒரு தொடர் கொலையாளியைப் போலச் செயல்பட்டு வந்த அய்யப்பனின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Soundarya

Recent Posts

விஜய்யின் போட்டோவை பார்த்து நேர்மையா நடந்துக்கோங்க… யாரும் துரோகம் பண்ணிராதீங்க… புஸ்ஸி ஆனந்த உருக்கமான வேண்டுகோள்..!!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆதரவு குறித்த முடிவை…

9 minutes ago

SRH vs PBKS: “கேட்ச் பிடிச்சது ஓகே பாஸ்”.. அது என்ன தம்பி அப்படி ஒரு கொண்டாட்டம்..? ஈஷான் மலிங்காவை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என திகைத்த காவ்யா..!!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், SRH அணியின் இளம் வீரர் இஷான் மலிங்கா ஒரு முக்கியமான கேட்ச்சை…

23 minutes ago

“மக்களின் தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை” களத்தில் இறங்கிய ‘காமராஜர்’… காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி AI வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்…

36 minutes ago

நிஜமானதா 2022-ல் சொன்ன ஜோசியம்..? குரூஸ் கப்பல்.. ஹண்டா வைரஸ்.. அன்றே கணித்த நெட்டிசன்..! மிரள வைக்கும் வைரல் ட்வீட்..!!

கடந்த 2022-ஆம் ஆண்டு பயனர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், எதிர்காலத்தில் ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும்,…

38 minutes ago

“உடனே விஜய்யை முதல்வர் ஆக்குங்க” தளபதிக்கு ஆதரவாக களத்தில் குதித்த மன்சூர் அலிகான்… வெளியா பரபரப்பு வீடியோ..!!

தமிழக அரசியலில் "அடுத்த முதல்வர் யார்?" என்ற மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள…

41 minutes ago

மருத்துவக் கல்லூரியா? சித்திரவதை கூடமா? “என் விரலை உடைச்சிட்டாங்க” கதறிய மருத்துவ மாணவர்… பிரயாக்ராஜ் மருத்துவக் கல்லூரியில் பயங்கர ராகிங்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

 சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக்…

52 minutes ago