ஐயோ கொடுமையே… போதையில் பறந்த சொகுசு கார்… தலைகீழாக கவிழ்ந்த தம்பதியின் வாகனம்… ஹைதராபாத்தில் பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 23, 2026

Spread the love

ஹைதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பீர்கேடிகுடா பகுதியில் நடந்த விபத்தில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 19 வயது இளைஞர் அகூன் சபர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். உப்பல்-நாரப்பள்ளி உயர்மட்ட மேம்பாலம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், எதிரே வந்த ஹூண்டாய் i10 கார் மீது சொகுசு கார் மோதியதில் கார் பலமுறை தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் சாய் சிவா (30) மற்றும் அவரது மனைவி மேக்னா (28) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக சைதன்யாபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநரின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக அதாவது 238 மி.கி மது போதை இருந்தது கண்டறியப்பட்டது.

   

https://twitter.com/HateDetectors/status/2113583347318603957/video/1

   

போலீஸாரின் விசாரணையில், கைதான நபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும், காரில் போலியான நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், வாகன உரிமையாளர் மங்கலலால் உட்பட இருவர் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.