உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் ஜான்சி-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜக்மோகன் திவாரி (56) என்ற நபர் கடந்த அக்டோபர் 9 அன்று தனது வயலுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரது உடல் நெடுஞ்சாலையிலேயே சுமார் இரண்டு நாட்களாகக் கிடந்ததாகவும், அதன் மீது வாகனங்கள் ஏறிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சாலைப் பணிகள் நடைபெற்று வந்ததே இந்தச் சோகச் சம்பவத்திற்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் பணிகள் நடந்து கொண்டிருந்ததால், அப்பகுதியில் சென்றவர்கள் யாரும் உயிரிழந்த கிடந்த உடலைக் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது மகன் ஆயுஷ்யா, தனது தந்தையின் உடலை அங்கிருந்த உடைகள் மற்றும் செருப்புகளைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அடையாளம் கண்டார்.
https://twitter.com/IndiaToday/status/2109927477871325469/video/1
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், மேற்கொண்டு தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
