அட கொடுமையே… ஹெல்மெட் போடாததால் வந்த வினை…! கண் இமைக்கும் நேரத்தில் விழுந்த மரக்கிளை… பைக் ஓட்டியின் மண்டை உடைந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

பெங்களூரு ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலையில் சதிஷ் (52) என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரத்தின் காய்ந்த கிளை திடீரென முறிந்து, நேராக அவரது தலையில் விழுந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

மரக்கிளை பலமாக தாக்கியதில் நிலைதடுமாறி சதிஷ் கீழே விழுந்தார். விபத்தின் போது அவர் ஹெல்மெட் அணியாததால், அவரது தலையில் நேரடியாக பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கினார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

   

இந்த விபத்து, வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பொதுவாக மற்ற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும்போது மட்டுமே ஹெல்மெட் தேவைப்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இயற்கை சீற்றங்கள் அல்லது இது போன்ற எதிர்பாராத ஆபத்துகளில் இருந்தும் நமது உயிரைக் காக்க ஹெல்மெட் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.