“எங்க முதலாளி தங்க முதலாளி” ரூ.1.5 கோடியில் வீடு வாங்கி கொடுத்து… ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனம்…!!

By Soundarya on மார்கழி 22, 2025

Spread the love

ஊழியர்களுக்கு தலா ரூ. 1.5 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பரிசாக வழங்கி  சீன நிறுவனம் சர்பிரைஸ் கொடுத்துள்ளது. ஜெஜியாங் குவோஷெங் ஆட்டோமொபைல் கோ லிமிடெட் (Zhejiang Guosheng Automobile Co Ltd). இது வாகனங்களுக்கான ஃபாஸ்டென்சர்களை (automotive fasteners) தயாரிக்கும் ஒரு சீன நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவன வளாகத்திற்கு அருகிலேயே 18 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளது.

நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு இந்தக் குடியிருப்புகள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பின் மதிப்பு சுமார் ₹1.5 கோடி ஆகும்.  திறமையான ஊழியர்களை ஈர்க்கவும், நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்ற ஊக்குவிக்கவும் இந்தத் தனித்துவமான திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.