தமிழக அரசியலில் ‘ஷேர் ஆட்டோ’ பாலிட்டிக்ஸ்… விஜய்க்கு பாஜக விரித்த சிவப்பு கம்பளம்… திமுக-வை வீழ்த்த டெல்லி மேலிடம் எடுத்த விஸ்வரூப ஆயுதம்..!!!

By Rajeshwari on பங்குனி 13, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜக, விஜய்யை நோக்கி ஒரு ‘சிவப்புக் கம்பள’ வரவேற்பை நீட்டியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் டெல்லி மேலிடத்தின் திட்டப்படி, வெற்றி பெற்றால் இரண்டரை ஆண்டுகள் ஒருவருக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மற்றொருவருக்கும் முதலமைச்சர் பதவி என்ற ‘பகிர்வு ஆட்சி’ முறை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆஃபர் விஜய்க்கு அதிகாரத்தை எளிதாகப் பெற்றுத் தந்தாலும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட விரும்பும் அவரது கொள்கை முடிவுக்கு இது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

   

இதனால் மறுபுறம், இந்த புதிய அரசியல் நகர்வு அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கொள்கை ரீதியான கூட்டணியாக இல்லாமல், வெறும் அதிகாரப் பகிர்வுக்காக மட்டும் இணையும் இத்தகைய ‘பார்ட்னர்ஷிப்’ முறை தமிழகத்தின் தனித்துவமான திராவிட அரசியல் சூழலில் எடுபடுமா என்பது கேள்விக்குறியே.

   

இந்நிலையில் விஜய்யின் இளைய தலைமுறை செல்வாக்கும், தேசியக் கட்சியின் வியூகமும் இணைந்தால் அது ஒரு மாற்றத்தை உருவாக்குமா அல்லது விஜய்யின் தனித்துவத்தைச் சிதைக்குமா என்பது வரும் காலங்களில் அவர் எடுக்கப்போகும் முடிவிலேயே அடங்கியுள்ளது.