ஈகோ மோதல் இனி இல்லை..! இங்கிலாந்து அணியை மீண்டும் வழிநடத்தத் தயாராகும் ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் கூட்டணி..!!

By Soundarya on பங்குனி 22, 2026

Spread the love

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோருக்கு இடையே நிலவி வந்ததாகக் கூறப்பட்ட மோதல் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆஷஸ் (2025-26) தொடரில், இங்கிலாந்து அணி 1-4 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, அணியின் வியூகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த இக்கட்டான சூழலில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தலையிட்டு பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதன் விளைவாக, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் ஆகிய இருவரும் தங்களுக்குள் இருந்த மனக்கசப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அணியின் நலனுக்காக மீண்டும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளனர். “பாஸ்பால்” (Bazball) அதிரடி ஆட்டமுறை குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.