குடும்பத் தகராறு மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், குவாலியர் அருகே பிதர்வாரில் அனைவரையும் கண்கலங்க வைக்கும் ஒரு சோகக் காட்சி அரங்கேறியுள்ளது. கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு தனது மாமியார் வீட்டிலிருந்து காணாமல் போன சோம்ப்ரீத் கவுர், பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார். தனது மாமியார் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்த சோம்ப்ரீத், விவாகரத்து பெற்று தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். இரு குடும்பங்களின் சம்மதத்துடன் விவாகரத்து இறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டு வயதுக் குழந்தை தாயுடன் செல்லும் என முடிவெடுக்கப்பட்டது.
ग्वालियर: तलाक के बीच मासूम की जुदाई का भावुक पल
भितरवार (ग्वालियर): पारिवारिक कलह और कानूनी अलगाव के बीच एक ऐसा मंजर सामने आया जिसने हर किसी की आँखें नम कर दीं।
8 दिन पहले अपने ससुराल से लापता हुई सोमप्रीत कौर को पुलिस ने पंजाब के एक गुरुद्वारे से ढूंढ निकाला।सोमप्रीत ने… pic.twitter.com/zoOk6pQume
— Raja yadav (@rajayadav47) February 10, 2026
தந்தை தனது மடியில் வைத்திருந்த குழந்தையைத் தாயிடம் ஒப்படைத்த தருணம் காண்போர் இதயத்தை ரணமாக்கியது. அந்த இரண்டு வயதுக் குழந்தை தனது தந்தையை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிடிவாதமாக அவரைப் பிடித்துக் கொண்டு அழுதது, அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. தனது உயிருக்குயிரான குழந்தை தன்னை விட்டுச் செல்வதைத் தாங்க முடியாமல் அந்தத் தந்தை திகைத்து நின்றார்.
