BREAKING: முதல்வர் படம் மாற்றப்பட்டது…. இணையத்தை அதிரவைக்கும் புகைப்படம்…!

By Nanthini on வைகாசி 10, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், ‘CMO Tamil Nadu’ என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தின் முகப்புப் படம் மாற்றப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் விஜய் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் கம்பீரமான காட்சியும், தமிழக முதல்வர் இருக்கையில் அவர் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களும் அந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

நிஜ அரசியலில் தங்களின் தலைவர் அரியணை ஏற வேண்டும் என்ற தவெக தொண்டர்களின் நீண்ட கால கனவு தற்போது டிஜிட்டல் தளத்தில் இந்த புகைப்படங்கள் வாயிலாக நனவாகி வருவதால், உற்சாகமடைந்த அக்கட்சியினர் “CMO TAMILNADU” என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்தியா முழுவதும் வைரலாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.