BREAKING: ஒரே கையெழுத்தில் புதிய வரலாறு.. ₹18,123 கோடி கூட்டு ஒப்பந்தத்தில் முதல்வர் விஜய் கையெழுத்து..!!

By Swetha on ஆனி 2, 2026

Spread the love

தமிழகத்தில் ‘ஜல் ஜீவன் 2.0’ திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்த மதிப்பீட்டுத் தொகை ₹18,123 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான நிதிப் பங்கீட்டில் மத்திய அரசின் பங்கு மற்றும் தமிழக அரசின் பங்கு ஆகியவை சம அளவில் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய அரசு தன் பங்காக ₹9,025.68 கோடியையும், தமிழக அரசு தன் பங்காக ₹9,097.37 கோடியையும் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகளுக்குத் தடையற்ற, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் முழுமையாகக் கொண்டு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.