ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த பால சைதுலு என்பவரும், சிலக்கலூரிபேட்டையைச் சேர்ந்த 24 வயதான ஷேக் ஹசீனாவும் கல்லூரி தேர்வுகளின் போது அறிமுகமாகி காதலிக்கத் தொடங்கினர். தேர்வில் தோல்வியடைந்த சைதுலு தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து வர, தேர்ச்சி பெற்ற ஹசீனா சுல்லூர்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். இந்நிலையில், ஹசீனா வேலை செய்யும் இடத்தில் வேறொரு நபருடன் நட்பாகப் பழகியதை அறிந்த சைதுலு கடும் கோபமடைந்தார். தனது காதலி வேறு யாருக்கும் சொந்தமாகக் கூடாது என்ற வன்மத்தில் அவரை நிரந்தரமாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
கடந்த 4-ஆம் தேதியன்று ஹசீனாவை இனிமையாகப் பேசி வெளியே வரவழைத்த சைதுலு, அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஆள் அரவமற்ற தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வேறொரு நபருடனான பழக்கம் குறித்து இருவருக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதத்தின் முடிவில், திட்டமிட்டபடியே சைதுலு ஹசீனாவை கொடூரமாக வெட்டிக் கொன்றார்; பின்னர் அடையாளத்தை மறைப்பதற்காக பைக்கில் இருந்த பெட்ரோலை ஊற்றி உடலை எரித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் தப்பினார். மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், செல்போன் சிக்னல் மூலம் தேடிச் சென்று புறநகர்ப் பகுதியில் கருகிய நிலையிலிருந்த உடலைக் கண்டறிந்தனர். ஹசீனாவின் எண்ணிற்கு வந்த கடைசி அழைப்பை வைத்து விசாரணை நடத்திய காவல் துறையினர், சைதுலுவின் கொடூரச் செயலை உறுதி செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…