தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடிக்கு இப்படி ஒரு சிக்கலா? அவரது படமே அவருக்கு போட்டியா…? – இது சவாலுக்கு சொந்தக்காரரே நம்ம தளபதிதான்!

By Elango on தை 5, 2026

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான மன ஷங்கர வரபிரசாத் காரு என்ற படமும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக வரும் 14 அன்று திரைக்கு வருகிறது.

விஜய் நடித்த ஜனநாயகன் படம் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது உறுதியாகிவிட்டது. இந்த பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி தான். அந்த வகையில் அனில்ரவிபுடியின் கதை தான் இப்போது ரீமேக் செய்யப்பட்டு ஜனநாயகன் என வெளியாகிறது. அதனால் மன ஷங்கர வரபிரசாத் காரு என்ற அனில் ரவிபுடி இயக்கிய படத்துக்கு, இப்போது அவரது கதையில் உருவான ஜனநாயகன் படமே போட்டியாக வந்திருக்கிறது. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இயக்குனர் அனில் ரவிபுடிக்கு அமைந்துவிட்டது.