அதிர்ச்சி… மைக் கிடைச்சா போதும்… வாய்க்கு வந்ததை பேசுவதா?… அமைச்சரைக் கிழித்தெறிந்த திமுக பரந்தாமன்…!!

By Swetha on ஆவணி 2, 2026

Spread the love

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எங்கெல்லாம் மைக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசுவதாக திமுகவைச் சேர்ந்த பரந்தாமன் காட்டமாகச் சாடியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டி.கே.சிவகுமாரை திமுகதான் பின்னணியில் இருந்து கட்டுப்படுத்துகிறது என்று அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தி தெரிவித்த எந்த விஷயத்தை டி.கே.சிவகுமார் செய்யாமல் விட்டுவிட்டார் என்பதைப் பொதுவெளியில் அமைச்சரால் நிரூபிக்க முடியுமா என்றும் அவர் சவால் விடுத்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் உடனடியாக விளக்க வேண்டும் என்றும் பரந்தாமன் வலியுறுத்தினார்.