BREAKING: கரூர் துயர சம்பவம்… விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்…!!

By Soundarya on தை 18, 2026

Spread the love
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மத்திய புலனாய்வுத் துறை (CBI) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தவெக-வின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது . ஏற்கனவே கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர்கள் ஆதித்யா அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகர் விஜய் ஏற்கனவே ஜனவரி 12, 2026 அன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி சுமார் 6 முதல் 7 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது கூட்ட நெரிசலுக்கு காவல்துறையின் மேலாண்மை குறைபாடே காரணம் என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் விடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டாம் கட்ட விசாரணைக்காக நாளை மீண்டும் ஆஜராக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.