அடக் கடவுளே!.. துப்பாக்கியை எடுத்து பெண் மீது சுட்ட நாய்.. வீட்டில் வளர்த்த செல்லப் பிராணி செய்த விபரீதம்.. பின்னணியில் நடந்த திகில் ட்விஸ்ட்.!!

Spread the love

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள ஸ்காட்ஸ்ப்ளஃப் பகுதியில், செல்ல நாய் ஒன்று துப்பாக்கியால் சுட்டதில் சாலையில் காரில் காத்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் காயமடைந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, கடந்த சனிக்கிழமையன்று எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நபர் ஒருவர் தனது பிக்கப் டிரக் வாகனத்தில் செல்ல நாயையும் மற்றொரு பயணியையும் அமர வைத்துவிட்டு கடைக்குச் சென்றுள்ளார். உரிமையாளர் சென்றவுடன் காரின் பின் இருக்கையில் இருந்த நாய் திடீரென அங்குமிங்கும் குதித்தபோது, அங்கிருந்த தோட்டா நிரப்பப்பட்ட ஷாட்கன் (Shotgun) துப்பாக்கியின் விசையை எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளது. இதில் துப்பாக்கி வெடித்து, குண்டுகள் காரின் கதவைத் துளைத்துக்கொண்டு நேராக வெளியே பாய்ந்தன.

அதே நேரத்தில், அருகிலுள்ள போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்குக்காகத் தனது காரில் காத்திருந்த பெண் ஒருவரின் கையில் இந்தத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. காருக்குள் இருந்து நாய் சுட்டதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகனத்தில் இருந்து புகை வருவதையும் உள்ளே நாய் மற்றும் துப்பாக்கி இருப்பதையும் கண்டு ஆச்சரியமடைந்தனர். துப்பாக்கியை பாதுகாப்பற்ற முறையில் தோட்டாக்கள் நிரப்பி வாகனத்தில் எடுத்துச் சென்றது சட்டவிரோதம் என்பதால், தற்போது உரிமையாளரின் இந்த அலட்சியப் போக்கிற்காக அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் காவல்துறை விசாரித்து வருகிறது.

Muthu Mani

Recent Posts

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

3 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

15 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

41 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

48 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

51 minutes ago