தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவற்றை பெறுவதற்கு ரேஷன் அட்டை கட்டாயம் என்றாலும் ரேஷன் கார்டு தொலைந்தவர்கள் ஏமாற்றம் அடைய தேவை இல்லை. அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டையின் நகல் அல்லது குடும்ப அட்டையின் எண்ணை கொடுத்தாலே நியாயவிலை கடைகளில் உள்ள பயோமெட்ரிக் கருவி மூலம் கைரேகை சரிபார்ப்பு செய்யப்பட்டு பொங்கல் பரிசு வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அட்டை கையில் இல்லை என்றாலும், பதிவு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் கைரேகை அங்கீகாரம் அல்லது ஆதார் எண் மூலம் சரிபார்க்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும்.
இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து மக்களும் விடுபடாமல் அரசு வழங்கும் சர்க்கரை, கரும்பு மற்றும் ரொக்கத் தொகையைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், அட்டை இல்லாத காரணத்தால் பொருட்கள் மறுக்கப்படுவதைத் தடுக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
