நாங்க கேள்வி கேட்க கூடாதா..? கடைசி நேரத்தில் கேட்கிறீங்க…! போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்…. உயர் அதிகாரியின் விளக்கம்…!

By Devi Ramu on மார்கழி 21, 2025

Spread the love

தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்களுக்கும் அங்கிருந்த பெண் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெராக்ஸ் எடுத்து வந்தால் போதும் என்று ஹால்டிக்கெட்டில் இருந்த தகவலை நம்பி வந்ததாக மாணவர்கள் வாதிட்டனர்.

ஆனால், அசல் சான்றிதழ்கள்  இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கறாராக மறுத்துவிட்டனர். 9:30 மணிக்கு மேல் ஒரு நிமிடம் தாமதமானாலும் அனுமதி கிடையாது என்று கூறி கேட் மூடப்பட்டதால், நீண்ட நேரம் காத்திருந்தும் உள்ளே செல்ல முடியாமல் போன மாணவர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.

   

இதற்கு விளக்கம் அளித்த காவல்துறை அதிகாரி, ஹால்டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஹால்டிக்கெட்டில் புகைப்படம் சரியாகத் தெரியாதவர்கள் மட்டுமே உயர் அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்ற நகலைக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

   

உரிய ஆவணங்கள் மற்றும் சரியான நேரத்தைக் கடைபிடிக்காததால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, மாணவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.