
CINEMA
“பிளான் பண்ணது 70 கோடி தான்”… ஆனா இப்போ எக்கச்சக்கமா எகிறிய கேப்டன் மில்லர் படத்தின் பட்ஜெட்.. செம அப்செட்டில் தயாரிப்பு நிறுவனம்..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். நிவேதிகா சதீஷ் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
மேலும் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 15 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக 70 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் பட்ஜெட் 110 கோடி ரூபாய் வரை அதிகமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இயக்குனர் மேல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது.