“டேய் நான் உன் அம்மா டா.. என்ன விட்டுடு ப்ளீஸ்”… பெற்ற தாயை கதற கதற சீரழித்த மகன்… தலைக்கேறிய போதையில் கொடூரத்தின் உச்சம்…!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு பகுதியில், மது போதையின் உச்சத்தில் பெற்ற தாயையே மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள மனிதாபிமானமற்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு, மாரிச்செல்வம் என்ற மூத்த மகனும், வேறு இரு பிள்ளைகளும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான மாரிச்செல்வம், தினந்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததால், அவரது மனைவி அவரைப் பிரிந்து கடந்த ஒரு வருடமாகத் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில், கோவையில் வேலை பார்த்து வந்த மாரிச்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். சம்பவத்தன்று இரவு வெளியே சென்று அதிகளவில் மது அருந்திவிட்டு, முழு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த தனது தாயிடம் எவ்வித காரணமும் இன்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாகத் தாக்கி, அடித்து உதைத்துள்ளார். அதோடு நிறுத்தாமல், போதை தலைக்கேறிய வெறியில், பெற்ற தாய் என்றும் பாராமல் அவரைப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த முதியவர், சுயநினைவை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு வந்த போலீசாரிடம் பாதிக்கப்பட்ட தாய் நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே வாக்குமூலமாக அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தாயின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாரிச்செல்வம் மது போதையில் தனது தாயைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, வீட்டில் இருந்த மாரிச்செல்வத்தை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SATHISH R

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

6 மணத்தியாலங்கள் ago