ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த கொம்பனை கிராமத்தில் கூடி தொழிலாளியான லிங்கப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ள நிலையில் மூன்று பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். லிங்கப்பன் மூத்த மகனான பொன்னுசாமி (42) என்பவர் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து கடந்து சில நாட்களாகவே தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னுசாமி சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சந்தையிடம் தகராறு செய்துள்ளார்.
நேற்று இரவும் வழக்கம் போல தந்தையிடம் மது அருந்திவிட்டு தவறாரில் ஈடுபட்டார். போதையில் இருந்த பொன்னுசாமி ஆத்திரம் அடைந்து தந்தை என்றும் பார்க்காமல் அவருடைய கழுத்தை நெரித்தார். இதனால் சம்பவ இடத்திலேயே லிங்கப்பன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். பிறகு மது போதையில் இருந்த பொன்னுசாமி தந்தை உடல் அருகே படுத்து தூங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாலை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சிலர் லிங்கப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லிங்கப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு பொன்னுசாமியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் தன் தந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொன்னுசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற தந்தையை மகனே போதையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…