சிறுவன் வாயில் மதுவை ஊற்றி…. நள்ளிரவில் கதற கதற… போலீஸ்காரர் செய்த கொடூரத்தால் அதிர்ச்சி…!!?

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு வந்துள்ளார். சிறுவனின் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், சிறுவன் மட்டும் மாமா வீட்டில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று இரவு, சிறுவனின் மாமாவும் அவரது நண்பரான வடபழனி காவல் நிலைய ஏட்டு வேலப்பனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் மாமா உறங்கிவிட்ட நிலையில், நள்ளிரவில் படுக்கையறைக்குள் புகுந்த போலீஸ்காரர் வேலப்பன், அங்கிருந்த சிறுவனுக்குக் கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி, கொடூரமான முறையில் பாலியல் ரீதியாக அத்துமீறி சித்ரவதை செய்துள்ளார்.சிறுவனின் துணிச்சலும் போலீஸ் விசாரணையும்இந்த அதிர்ச்சியான தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவன், அங்கிருந்த தொலைக்காட்சி ரிமோட்டால் போலீஸ்காரர் வேலப்பனைத் தாக்கி கீழே தள்ளியுள்ளார். தொடர்ந்து, அந்த அறையின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு நள்ளிரவில் நடந்தே அருகில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையினரிடம் கதறி அழுது புகார் அளித்துள்ளார். தகவலறிந்த அசோக் நகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டிற்குள் பூட்டப்பட்டிருந்த போலீஸ்காரர் வேலப்பனை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளனர்.