திருச்சியில் 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தற்போது அதிர்ச்சியூட்டும் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொடூரமான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக கார் ஓட்டுநரான மாரிசெல்வம் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குற்றச் சம்பவத்தில் மேலும் 10 சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த சிறுவர்கள் அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றாகச் சேர்ந்து அச்சிறுமிக்கு இந்த பாலியல் வன்கொடுமையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 10 சிறுவர்களில், 9 சிறுவர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒரு சிறுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
