மதன்னாப்பேட்டை பகுதியில் தனது மகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிய தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஐதராபாத்தின் பழைய நகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹஸ்மத் (55) என்பவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்த நிலையில், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முகமது என்ற வாலிபர் ஹஸ்மத்தின் மகளிடம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இவ்விஷயம் குறித்து அறிந்த ஹஸ்மத், தனது மகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என முகமதுவை எச்சரித்து அறிவுறுத்த முயன்றுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த முகமது, ஹஸ்மத்தை கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த கத்தியடி பட்ட ஹஸ்மத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது தனது தந்தையைக் காப்பாற்ற முயன்ற ஹஸ்மத்தின் மகன் உமர் என்பவரையும் முகமது தாக்கினார். இதில் உமருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
