“ஐயோ என் செல்ல தங்கச்சி” வீடு முழுவதும் ரத்தம் சிதறிக்கிடக்க.. மாடியில் நிம்மதியாக தூங்கிய அண்ணன்.. போலீசுக்கு வந்த சந்தேகம்… காட்டிக்கொடுத்த டி-ஷார்ட்.. தங்கை கொலையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

By Soundarya on சித்திரை 29, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே உள்ள குண்டர்க்கி பகுதியில், 17 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்குச் சென்றிருந்த பெற்றோர் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, வீடு முழுவதும் ரத்தம் சிதறிக்கிடக்க, தங்களது இளைய மகள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு கதறித் துடித்தனர். இந்தத் துயரமான சூழலில், அந்த வீட்டின் மொட்டை மாடியில் எவ்வித சலனமுமின்றித் தூங்கிக் கொண்டிருந்த மூத்த மகன் விக்கி மீது போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது.

தொடக்கத்தில் போலீசாரிடம் பேசிய விக்கி, யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தனது தங்கையைக் கொன்றுவிட்டதாக ஒரு த்ரில்லர் சினிமா பாணியில் கதை கட்டினார். ஆனால், விக்கி அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இருந்த ரத்தக் கறைகள் உண்மையை உரக்கச் சொன்னன. “தங்கையைக் காப்பாற்ற முயன்றபோது ரத்தம் ஒட்டியது” என அவர் சமாளித்தாலும், தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் அவர் பொய் சொல்வது உறுதியானது. இறுதியில், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது உடன் பிறந்த தங்கையைத் தானே கொலை செய்ததை விக்கி ஒப்புக்கொண்டார்.

   

கைது செய்யப்பட்ட விக்கியின் பின்னணி குறித்து விசாரித்தபோது அவர் ஒரு குற்றப் பின்னணி கொண்டவர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே பெண்கள் தொடர்பான புகார்கள் மற்றும் அடிதடி வழக்குகளில் மூன்று முறை சிறை சென்றவர் என்பதும், தீபாவளி பண்டிகையின் போதுதான் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் அம்பலமானது. ஐந்து உடன்பிறந்தவர்களில் மிகவும் செல்லமான கடைக்குட்டித் தங்கையை, பாதுகாப்பாக இருக்க வேண்டிய அண்ணனே வெறித்தனமாகக் கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது விக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.