நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  மறைந்த தனது சகோதரியின் நினைவாக, அவரது எலும்புகளைக் கொண்டு ‘விண்ட் சைம்’ (Wind Chime) எனப்படும் காற்றாடி மணியைச் செய்துள்ளார் ஒரு பெண். பொதுவாக உடல் தகனம் செய்யப்பட்ட பின் அஸ்தி கரைக்கப்படும் நிலையில், தனது சகோதரி எப்போதும் காற்றுடன் கலந்து தன்னுடனேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவரது எலும்புகளைப் பதப்படுத்தி இந்த மணியை உருவாக்கியுள்ளார். அந்த மணி காற்றில் அசையும் போதெல்லாம் தனது சகோதரியின் குரலைக் கேட்பது போல் உணர்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 இதுமட்டுமின்றி, ‘வாட்டர் கிரிமேஷன்’ (Water Cremation) எனப்படும் நீர் மூலமான தகன முறையும் இப்போது பிரபலமாகி வருகிறது. இதில் உடல் ரசாயனக் கரைசல் மூலம் சிதைக்கப்பட்டு, மீதமாகும் சாம்பல் உரமாக்கப்படுகிறது. இந்தச் சாம்பலைப் பயன்படுத்தி செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஒரு மனிதன் மறைந்த பிறகும் செடி கொடிகளாக உயிர் வாழலாம் என்ற இந்தத் தத்துவம் பலரை ஈர்த்துள்ளது. பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக, உணர்வுப்பூர்வமான மற்றும் சூழல் சார்ந்த இத்தகைய இறுதிச் சடங்குகள் குறித்த விவாதம் தற்போது மேலை நாடுகளில் அதிகரித்துள்ளது.